போதைப்பொருள் வியாபாரி “லொகேஷன் குடு மல்லி” கைது

#SriLanka #Arrest #Police #drugs #Court #smugglers
Prasu
1 year ago
போதைப்பொருள் வியாபாரி “லொகேஷன் குடு மல்லி” கைது

போதைப்பொருள் வியாபாரி என சந்தேகிக்கப்படும் “லொகேஷன் குடு மல்லி” படல்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

படல்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மூலம் பல பிரதேசங்களுக்கு போதைப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. 

இவரிடமிருந்து 6,120 மில்லி கிராம் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் மினுவாங்கொடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 

 இதையடுத்து அவரை ஒரு வாரக் காலம் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ள படல்கம பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!